2. நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று.
3. அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும் என்றான்.
4. அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
5. பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:
6. இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்.
7. நீர் என்னைப் பணிந்துகொண்டால் எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான்.
8. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
9. அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும்.
10. ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும்,
11. உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
12. அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார்.
13. பிசாசானவன் சோதனையெல்லாம் முடித்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான்.
14. பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று.
15. அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் உபதேசித்து, எல்லாராலும் புகழப்பட்டார்.
16. தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்.
17. அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது:
21. அப்பொழுது அவர் அவர்களோடே பேசத்தொடங்கி: உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார்.
22. எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டு: இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா என்றார்கள்.
23. அவர் அவர்களை நோக்கி: வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள் என்கிற பழமொழியைச் சொல்லி, நாங்கள் கேள்விப்பட்டபடி கப்பர்நகூமூரில் உன்னால் செய்யப்பட்ட கிரியைகள் எவைகளோ அவைகளை உன் ஊராகிய இவ்விடத்திலும் செய் என்று நீங்கள் என்னுடன் சொல்லுவீர்கள் என்பது நிச்சயம்.
24. ஆனாலும் தீர்க்கதரிசி ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக்கப்படமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
25. அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது, இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.
26. ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை.
27. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்; ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
29. எழுந்திருந்து, அவரை ஊருக்குப் புறம்பே தள்ளி, தங்கள் ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிவிடும்படிக்கு அவ்விடத்திற்குக் கொண்டு போனார்கள்.
30. அவரோ அவர்கள் நடுவினின்று கடந்துபோய்விட்டார்.
31. பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் பட்டணத்துக்கு வந்து, ஓய்வு நாட்களில் ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார்.
32. அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாயிருந்தபடியால் அவருடைய போதகத்தைக்குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
33. ஜெப ஆலயத்திலே அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு மனுஷன் இருந்தான்.
34. அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று உரத்த சத்தமிட்டான்.
35. அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப்போ என்று அதை அதட்டினார்; அப்பொழுது பிசாசு அவனை ஜனங்களின் நடுவே விழத்தள்ளி, அவனுக்கு ஒரு சேதமுஞ்செய்யாமல், அவனை விட்டுப் போய்விட்டது.
36. எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன வார்த்தையோ! அதிகாரத்தோடும் வல்லமையோடும் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் புறப்பட்டுப் போகிறதே என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
37. அவருடைய கீர்த்தி சுற்றிலுமிருந்த நாடுகளிலுள்ள இடங்களிலெல்லாம் பிரசித்தமாயிற்று.
38. பின்பு அவர் ஜெப ஆலயத்தை விட்டுப்புறப்பட்டு, சீமோன் வீட்டில் பிரவேசித்தார், சீமோனுடைய மாமி கடும் ஜூரமாய்க் கிடந்தாள். அவளுக்காக அவரை வேண்டிக்கொண்டார்கள்.
39. அவர் அவளிடத்தில் குனிந்து நின்று, ஜூரம் நீங்கும்படி கட்டளையிட்டார், அது அவளை விட்டு நீங்கிற்று; உடனே அவள் எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.
40. சூரியன் அஸ்தமித்தபோது, ஜனங்களெல்லாரும் தங்களுக்குள்ளே பலபல வியாதிகளால் வருத்தப்பட்டவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர்மேலும் அவர் தம்முடைய கைகளை வைத்து, அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
41. பிசாசுகளும்: நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டு, அநேகரைவிட்டுப் புறப்பட்டது. அவரைக் கிறிஸ்து என்று பிசாசுகள் அறிந்திருந்தபடியால் அவர் அவைகளைப் பேசவொட்டாமல் அதட்டினார்.
42. உதயமானபோது, அவர் புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப் போனார். திரளான ஜனங்கள் அவரைத் தேடி, அவரிடத்தில் வந்து, தங்களை விட்டுப் போகாதபடிக்கு அவரை நிறுத்திக்கொண்டார்கள்.
43. அவரோ அவர்களை நோக்கி: நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன் என்றார்.
44. அந்தப்படியே கலிலேயா நாட்டிலுள்ள ஜெபஆலயங்களில் பிரசங்கம்பண்ணிக்கொண்டுவந்தார்.
2. அங்கு நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் உண்ணவில்லை. அந்த நாட்கள் கழிந்ததும், அவருக்குப் பசியெடுத்தது.
3. அப்பொழுது அலகை அவரை நோக்கி, "நீர் கடவுளின் மகனானால் அப்பமாக மாறும்படி இந்தக் கல்லுக்குச் சொல்லும்" என்றது.
4. அதற்கு இயேசு, "மனிதன் உயிர் வாழ்வது அப்பத்தினால் மட்டுமன்று' என எழுதி இருக்கின்றதே" என்றார்.
5. பின்பு அலகை அவரை அழைத்துச் சென்று உலக அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் அவருக்குக் காட்டி,
6. "இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும், இவற்றின் மகிமையையும் உமக்குக் கொடுப்பேன். ஏனெனில், இவை யாவும் என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளன. 'என் விருப்பம்போல் எவருக்கும் இவற்றைக் கொடுக்கமுடியும்.
7. எனவே நீர் தெண்டனிட்டு என்னை வணங்கினால் இவையாவும் உம்முடையவை ஆகும்" என்றது.
8. அதற்கு இயேசு, " உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவரைமட்டுமே ஆராதிப்பாயாக ' என எழுதியிருக்கின்றதே " என்றார்.
9. பின்னர் அலகை அவரை யெருசலேமுக்குக் கூட்டிச் சென்று, கோயிலில் முகட்டில் நிறுத்தி, " நீர் கடவுளின் மகனனானால் இங்கிருந்து கீழேகுதியும்.
10. ஏனெனில், ' உம்மைக் காக்கும்படி தம் தூதர்களுக்குக் கட்டளையிடுவார் ' என்றும்,
11. 'உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்' என்று எழுதியுள்ளது" என்றது.
12. அதற்கு இயேசு, "உன் கடவுளாகிய ஆண்டவரை நீ சோதியாதே' என்றும் சொல்லியிருக்கிறது " என்றார்.
13. இவ்வாறு, அலகை எல்லா விதத்திலும் இயேசுவைச் சோதித்தபின், குறித்த காலம் வரும்வரைக்கும் அவரை விட்டுச் சென்றது.
14. பின்னர், ஆவியானவரின் வல்லமை பூண்டவராய் இயேசு கலிலேயாவுக்குத் திரும்பினார். அவரைப்பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது.
15. யூதர்களுடைய செபக்கூடங்களில் அவர் போதித்துவந்தார். யாவரும் அவரை மகிமைப்படுத்தினர்.
16. அவர் தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்திற்கு வந்தார். வழக்கப்படி ஓய்வுநாளன்று செபக்கூடத்திற்கு வந்து வாசிக்க எழுந்தார்.
17. இசையாஸ் எழுதிய இறைவாக்குகளின் ஏட்டுச் சுருளை அவரிடம் கொடுத்தனர். அதை விரித்ததும் பின்வரும் பகுதியைக் கண்டார்.
18. 'ஆண்டவருடைய ஆவி என்மேலே, ஏனெனில், என்னை அபிஷுகம் செய்துள்ளார். 'எளியோர்க்கு நற்செய்தி சொல்லவும், சிறைப்பட்டோர் விடுதலையடைவர், குருடர் பார்வை பெறுவர் என அறிவிக்கவும், ஒடுக்கப்பட்டோர்க்கு உரிமை வாழ்வு வழங்கவும்,
19. ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பினார் '.
20. பின்னர் ஏட்டைச் சுருட்டிப் பணிவிடைக் காரனிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். செபக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே நோக்கியவண்ணமாயிருந்தன.
21. அப்போது அவர், " நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று " என்று கூறலானார்.
22. யாவரும் அவரைப் பாராட்டி, அவர் வாயினின்று எழுந்த அருள்மொழிகளை வியந்து, " இவர் சூசையின் மகனன்றோ ?" என்றனர்.
23. பின் அவர் அவர்களை நோக்கி, "' மருத்துவனே, உன்னையே குணமாக்கிக்கொள் ' என்ற பழமொழியை எனக்கே சொல்லிக்காட்டி, ' கப்பர்நகூம் ஊரில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டதெல்லாம், உம் சொந்த ஊராகிய இங்கேயும் செய்யும் ' எனக் கண்டிப்பாக நீங்கள் கூறுவீர்கள் " என்றார்.
24. மேலும், அவர், " உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்கப்படுவதில்லை.
25. உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: எலியாசின் காலத்தில் மூன்று ஆண்டுகள் ஆறு மாதங்களாக வானம் வறண்டு நாடெங்கும் பஞ்சம் உண்டானபோது, இஸ்ராயேல் நாட்டில் கைம்பெண்கள் பலர் இருந்தனர்.
26. ஆயினும் சீதோன் நாட்டின் சரெப்தா ஊர்க் கைம்பெண் ஒருத்தியிடமின்றி வேறு எவரிடமும் எலியாஸ் அனுப்பப்படவில்லை.
27. இறைவாக்கினரான எலிசேயுவின் காலத்திலும் இஸ்ராயேல் நாட்டில் தொழுநோயாளர் பலர் இருந்தனர். ஆயினும் சீரியா நாட்டு நாமானைத் தவிர வேறு எவரும் குணமாக்கப்படவில்லை " என்றார்.
28. இவற்றைக் கேட்டுச் செபக்கூடத்தில் இருந்த அனைவரும் வெகுண்டெழுந்து,
29. அவரை ஊருக்கு வெளியே தள்ளி, அவ்வூர் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிடக் கொண்டுசென்றனர்.
30. அவரோ அவர்களிடையே நடந்து தம் வழியே போனார்.
31. பின் கலிலேயா நாட்டுக் கப்பர்நகூம் ஊருக்கு வந்து, அங்கே மக்களுக்கு ஓய்வு நாளில் போதித்து வந்தார்.
32. அவர் அதிகாரத்தொனியோடே பேசினதால் அவருடைய போதனையைக் குறித்து மலைத்துப் போயினர்.
33. அப்போது, செபக்கூடத்தில் அசுத்தப்போய் பிடித்த ஒருவன் இருந்தான்.
34. அவன், " ஐயோ! நாசரேத்தூர் இயேசுவே, எங்கள் காரியத்தில் ஏன் தலையிடுகிறீர் ? எங்களைத் தொலைக்க வந்தீரோ ? நீர் யாரென்று எனக்குத் தெரியும். நீர் கடவுளின் பரிசுத்தர் " என்று உரக்கக் கத்தினான்.
35. அப்போது இயேசுவா, " பேசாதே, இவனை விட்டுப் போ " என்று அதட்டினார். அப்பொழுது, அப்பேய் அவனை அவர்கள்நடுவே வீழ்த்தி, அவனுக்கு ஒரு தீங்குமிழைக்காமல் அவனை விட்டு அகன்றது.
36. அதனால் திகில் எல்லாரையும் ஆட்கொள்ள, " இவர் வார்த்தை எத்தகையதோ ? அதிகாரத்தோடும் வல்லமையோடும் இவர் அசுத்தப் பேய்களுக்கும் கட்டளையிடுகிறார், அவை போய்விடுகின்றனவே! " என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டனர்.
37. அவரைப்பற்றிய பேச்சு சுற்றுப்புறமெல்லாம் பரவியது.
38. பின்னர், அவர் செபக்கூடத்தை விட்டு, சீமோன் வீட்டிற்கு வந்தார். சீமோனுடைய மாமியார் கடுஙகாய்ச்சலால் துன்பப்பட்டுக் கொண்டிருந்ததால் அவளுக்காக அவரிடம் வேண்டினர்.
39. அவர் அவளருகில் நின்று காய்ச்சலைக் கடிந்துகொண்டார். காய்ச்சல் அவளை விட்டு அகல, அவள் உடனே எழுந்து அவர்களுக்குப் பணிவிடை புரிந்தாள்.
40. பொழுது சாயும்வேளையில் யாவரும் தங்களிடையே இருந்த பற்பல பிணியாளரை அவரிடம் கொண்டுவந்தனர். ஒவ்வொருவர்மேலும் தம் கைகளை வைத்துக் குணமாக்கினார்.
41. பேய்கள், "நீரே கடவுளின் மகன்" என்று கூவிக்கொண்டு பலரிடமிருந்து வெளியேறின. அவர் மெசியா என்று அவை அறிந்திருந்ததால், இயேசு அவற்றை அதட்டிப் பேச விடவில்லை.
42. பொழுது புலரவே, அவர் புறப்பட்டுத் தனிமையானதோர் இடத்திற்குச் சென்றார். திரளான மக்கள் அவரைத் தேடினர். அவரிடம் வந்ததும் தங்களை விட்டு அகலாதபடி அவரை நிறுத்தப்பார்த்தனர்.
43. அவரோ, " நான் மற்ற ஊர்களுக்கும் கடவுளுடைய அரசைப்பற்றிய நற்செய்தியை அறிவிக்க வேண்டும். இதற்காகவே அனுப்பப்பட்டேன் " என்று அவர்களிடம் கூறினார்.
1. இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு யோர்தான் ஆற்றை விட்டுத் திரும்பினார். பின்னர் அவர் அதே ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
2. அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அந்நாள்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லை. அதன் பின் அவர் பசியுற்றார்.
3. அப்பொழுது அலகை அவரிடம் , "நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும்" என்றது.
4. அதனிடம் இயேசு மறுமொழியாக, "மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை" என மறைநூலில் எழுதியுள்ளதே" என்றார்.
5. பின்பு அலகை அவரை அழைத்துச் சென்று உலகத்தின் அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் அவருக்குக் காட்டி,
6. அவரிடம், "இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும் இவற்றின் மேன்மையையும் உமக்குக் கொடுப்பேன். இவை யாவும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன; நான் விரும்பியவருக்கு இவற்றைக் கொடுப்பேன்.
7. நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும்" என்றது.
8. இயேசு அதனிடம் மறுமொழியாக, "'உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக" என்று மறைநூலில் எழுதியுள்ளது" என்றார்.
9. பின்னர் அது அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்று கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, "நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்;
10. "உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்" என்றும்
11. "உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள்" என்றும் மறைநூலில் எழுதியுள்ளது" என்றது.
12. இயேசு அதனிடம் மறுமொழியாக, "'உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்' என்றும் சொல்லியுள்ளதே" என்றார்.
13. அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது.
14. பின்பு இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது.
15. அவர் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர்.
16. இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார்.
17. இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது;
18. "ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர். பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்
19. ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார். "
20. பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன.
21. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, "நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று" என்றார்.
22. அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, "இவர் யோசேப்பின் மகன் அல்லவா? "எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.
23. அவர் அவர்களிடம், "நீங்கள் என்னிடம், "மருத்துவரே உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்" என்னும் பழமொழியைச் சொல்லி, "கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்" எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள்.
24. ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
25. உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்.
26. ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெணண்ணிடமே அனுப்பப்பட்டார்.
27. மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழு நோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது" என்றார்.
28. தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங் கொண்டனர்;
29. அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர்.
30. அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.
31. பின்பு இயேசு கலிலேயாவிலுள்ள கப்பர்நாகும் ஊருக்குச் சென்று, ஓய்வு நாள்களில் மக்களுக்குக் கற்பித்து வந்தார்.
32. அவருடைய போதனையைக் குறித்து அவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் அதிகாரத்தோடு கற்பித்தார்.
33. தொழுகைக் கூடத்தில் தீய ஆவியான பேய் பிடித்திருந்த ஒருவர் இருந்தார்.
34. அவரைப் பிடித்திருந்த பேய், "ஐயோ! நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்" என்று உரத்த குரலில் கத்தியது.
35. "வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ" என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது பேய் பிடித்தவரை அவர்கள் நடுவே விழச்செய்து, அவருக்கு ஒரு தீங்கும் இழைக்காமல் பேய் அவரைவிட்டு வெளியேறிற்று.
36. எல்லாரும் திகைப்படைந்து, "எப்படிப் பேசுகிறார், பாருங்கள்! அதிகாரத்தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார்; அவையும் போய்விடுகின்றனவே!" என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டனர்.
37. அவரைப்பற்றிய பேச்சு சுற்றுப்புறமெங்கும் பரவியது.
38. பின்பு இயேசு தொழுகைக் கூடத்தைவிட்டு, சீமோன் வீட்டிற்குள் சென்றார். சீமோனின் மாமியார் கடுங்காய்ச்சலால் துன்புற்ற நிலையில் இருந்தார். அவர்கள் அவருக்காக இயேசுவிடம் வேண்டினார்கள்.
39. இயேசு அவரருகில் நின்று, காய்ச்சலைக் கடிந்துகொள்ள அது அவரைவிட்டு நீங்கிற்று. உடனே அவர் எழுந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.
40. கதிரவன் மறையும் நேரத்தில், எல்லாரும் தங்களிடையே பற்பல பிணிகளால் நலம் குன்றி இருந்தோரை அவரிடம் கூட்டிவந்தார்கள். அவர் ஒவ்வொருவர்மேலும் தம் கைகளை வைத்து அவர்களைக் குணமாக்கினார்.
41. பேய்களும், "நீர் இறைமகன்" என்று கத்திக்கொண்டே பலரிடமிருந்து வெளியேறின. அவர் மெசியா என்று பேய்கள் அறிந்திருந்தபடியால், அவர் அவற்றை அதட்டி, பேசவிடாமல் தடுத்தார்.
42. பொழுது விடியும் வேளையில் இயேசு தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். திரளான மக்கள் அவரைத் தேடிச் சென்றனர்; அவரிடம் வந்து சேர்ந்ததும் தங்களைவிட்டுப் போகாதவாறு அவரைத் தடுத்து நிறுத்தப் பார்த்தனர்.
43. அவரோ அவர்களிடம், "நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்; இதற்காகவே நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்" என்று சொன்னார்.
44. பின்பு அவர் யூதேயாவிலுள்ள தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றிவந்தார்.
1. And Jesus being full of the Holy Ghost returned from Jordan, and was led by the Spirit into the wilderness,
2. Being forty days tempted of the devil. And in those days he did eat nothing: and when they were ended, he afterward hungered.
3. And the devil said unto him, If thou be the Son of God, command this stone that it be made bread.
4. And Jesus answered him, saying, It is written, That man shall not live by bread alone, but by every word of God.
5. And the devil, taking him up into an high mountain, shewed unto him all the kingdoms of the world in a moment of time.
6. And the devil said unto him, All this power will I give thee, and the glory of them: for that is delivered unto me; and to whomsoever I will I give it.
7. If thou therefore wilt worship me, all shall be thine.
8. And Jesus answered and said unto him, Get thee behind me, Satan: for it is written, Thou shalt worship the Lord thy God, and him only shalt thou serve.
9. And he brought him to Jerusalem, and set him on a pinnacle of the temple, and said unto him, If thou be the Son of God, cast thyself down from hence:
10. For it is written, He shall give his angels charge over thee, to keep thee:
11. And in their hands they shall bear thee up, lest at any time thou dash thy foot against a stone.
12. And Jesus answering said unto him, It is said, Thou shalt not tempt the Lord thy God.
13. And when the devil had ended all the temptation, he departed from him for a season.
14. And Jesus returned in the power of the Spirit into Galilee: and there went out a fame of him through all the region round about.
15. And he taught in their synagogues, being glorified of all.
16. And he came to Nazareth, where he had been brought up: and, as his custom was, he went into the synagogue on the sabbath day, and stood up for to read.
17. And there was delivered unto him the book of the prophet Esaias. And when he had opened the book, he found the place where it was written,
18. The Spirit of the Lord is upon me, because he hath anointed me to preach the gospel to the poor; he hath sent me to heal the brokenhearted, to preach deliverance to the captives, and recovering of sight to the blind, to set at liberty them that are bruised,
19. To preach the acceptable year of the Lord.
20. And he closed the book, and he gave it again to the minister, and sat down. And the eyes of all them that were in the synagogue were fastened on him.
21. And he began to say unto them, This day is this scripture fulfilled in your ears.
22. And all bare him witness, and wondered at the gracious words which proceeded out of his mouth. And they said, Is not this Joseph's son?
23. And he said unto them, Ye will surely say unto me this proverb, Physician, heal thyself: whatsoever we have heard done in Capernaum, do also here in thy country.
24. And he said, Verily I say unto you, No prophet is accepted in his own country.
25. But I tell you of a truth, many widows were in Israel in the days of Elias, when the heaven was shut up three years and six months, when great famine was throughout all the land;
26. But unto none of them was Elias sent, save unto Sarepta, a city of Sidon, unto a woman that was a widow.
27. And many lepers were in Israel in the time of Eliseus the prophet; and none of them was cleansed, saving Naaman the Syrian.
28. And all they in the synagogue, when they heard these things, were filled with wrath,
29. And rose up, and thrust him out of the city, and led him unto the brow of the hill whereon their city was built, that they might cast him down headlong.
30. But he passing through the midst of them went his way,
31. And came down to Capernaum, a city of Galilee, and taught them on the sabbath days.
32. And they were astonished at his doctrine: for his word was with power.
33. And in the synagogue there was a man, which had a spirit of an unclean devil, and cried out with a loud voice,
34. Saying, Let us alone; what have we to do with thee, thou Jesus of Nazareth? art thou come to destroy us? I know thee who thou art; the Holy One of God.
35. And Jesus rebuked him, saying, Hold thy peace, and come out of him. And when the devil had thrown him in the midst, he came out of him, and hurt him not.
36. And they were all amazed, and spake among themselves, saying, What a word is this! for with authority and power he commandeth the unclean spirits, and they come out.
37. And the fame of him went out into every place of the country round about.
38. And he arose out of the synagogue, and entered into Simon's house. And Simon's wife's mother was taken with a great fever; and they besought him for her.
39. And he stood over her, and rebuked the fever; and it left her: and immediately she arose and ministered unto them.
40. Now when the sun was setting, all they that had any sick with divers diseases brought them unto him; and he laid his hands on every one of them, and healed them.
41. And devils also came out of many, crying out, and saying, Thou art Christ the Son of God. And he rebuking them suffered them not to speak: for they knew that he was Christ.
42. And when it was day, he departed and went into a desert place: and the people sought him, and came unto him, and stayed him, that he should not depart from them.
43. And he said unto them, I must preach the kingdom of God to other cities also: for therefore am I sent.